Latest News :

ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!
Saturday December-01 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் பல வகையில் உதவி செய்து வரும் நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த செலவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுக்கிறார். இதற்காக தனது குழுவினருடன் டெல்டா மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் லாரன்ஸ், தற்போது வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

ஏற்கனவே, முதியவர் ஒருவருக்கு வீடு கட்டும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கிய ராகவா லாரன்ஸ், இரண்டாவதாக சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

 

சாதாரன ஏழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கும் ஆலங்குடி 515 கணேசன்.

 

அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை, ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.

 

மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவராகவும் இவர் இருக்கிறார்.

 

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்த இவரது வீடும் கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால், அதை சிறிது கூட பொருட்படுத்தாத கணேசன், கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய போய்விட்டார்.

 

இதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ், அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை போட்டு, கட்டுமான பணியை உடனடியாக தொடங்கிவிட்டார்.

 

மேலும், சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, பாத்திரங்கள், கட்டில், பீரோ, மின் விசிறி, ஏ.சி என்று அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுக்கவும் லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக மொத்தமாக சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆகும் என்றாலும், அதனை செய்ய லாரன்ஸ் தயாராகவே இருக்கிறார்.

 

காரணம், ஆலங்குடி கணேசனை தனது அப்பா ஸ்தானத்தில் ராகவா லாரன்ஸ் பார்க்கிறாராம்.

Related News

3835

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery