சிறு வேடமாக இருந்தாலும், நடிப்பு மூலம் மற்றவர்களின் சிந்தனையை தனது பக்கம் திருப்பும் நடிகர்கள் தான் எதிர்காலத்தில் பெரிய வேடங்களில் நடிக்கும் பெரிய நடிகர்களாக உருவெடுக்கிறார்கள். அந்த வழியில் வந்து இன்று தனக்கென்று தனி வழியோடு கோடம்பாக்கத்தில் வலம் வரும் நடிகர்கள் பலர் இருக்க, அவர்கள் வழியில் மேலும் ஒரு நடிகராக வந்திருப்பவர் தான் ராஜதிருமுருகன் என்கிற செந்தில்குமார்.
‘அண்ணாதுரை’ மற்றும் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள், யாருப்பா இவரு, என்று கேட்க, திரையுலகினரோ “இவரா!” என்று ஆச்சரியப்பட்டார்கள். ஆம், பத்திரிகை நிருபராக திரையுலகினருக்கு நன்கு பழக்கப்பட்ட செந்தில்குமார், தற்போது குணச்சித்திர நடிகராக அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
’இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் முகம் காட்ட தொடங்கிய செந்தில்குமாரின் முகம் ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படம் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’. படம் எப்படியோ, ஆனால் அதில் ஹீரோயினுக்கு அப்பாவாக கோதண்டம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த செந்தில்குமாரின் வேடமும், அவரது நடிப்பும் பெரும் வரவேற்பு பெற்றது. வரவேற்புடன் வி4 அமைப்பு வழங்கும் ‘எம்.ஜி.ஆர்-சிவாஜி’ விருதை பெற்ற செந்தில்குமார், சமீபத்தில் வெளியான ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் ஒரு மேலே சென்றதோடு, தன்னை ஆல்ரவுண்டராகவும் நிரூபித்திருக்கிறார்.
படத்தின் முக்கியமான வேடங்களான சிறார் குற்றவாளிகளாக நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவரது, அதாவது கவுன்சிலர் மகளை காதலித்து அவமானப்படும் சிறுவனின் அப்பா வேடத்தில் செந்தில்குமார் நடித்திருந்தார். சராசரியான ஒரு தந்தையின் வேடத்தை தனது நடிப்பால் பிரதிபலித்த செந்தில்குமார், திடீரென்று தனது மகனை அவமானப்படுத்திய கவுன்சிலருடன் மல்லுக்கட்டும் காட்சியில் தனது ஆக்ஷன் திறமையாலும் அசத்திவிட்டார். அதற்காக ஏதோ பறந்து...பறந்து...அடித்தார் என்று நினைக்க வேண்டாம். சாதாரண மனிதருக்கு கோபம் வந்தால், அவர் எப்படி சண்டையிடுவாரோ அப்படியே சண்டைப்போட்டு ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான ஜாக்குவார் தங்கம் போன்றவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திய செந்தில்குமாருக்கு இந்த முறையும் பாராட்டுடன் விருதும் கிடைத்திருக்கிறது.
‘திமிரு புடிச்சவன்’ படத்திற்காக செந்தில்குமாருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான அலெகிரியா ரிசார்ட் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவருக்கு வழங்கியது வேறு யாருமல்ல, அவரது ஆக்ஷனை பார்த்து வியந்து பாராட்டிய ஜாக்குவா தங்கமும், பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும்.
அப்படியே, விஜய் விருது, பிலிம்பேர் விருதுகளையும் செந்தில்குமார் சீக்கிரம் வாங்க நாமும் வாழ்த்துவோம்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...