கை நிறைய வாய்ப்பு, பாங்க் அக்கவுண்ட் நிறைய பணம், என்று தமிழ் சினிமாவில் குஷியாக இருக்கும் ஹீரோக்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். அவர் நடிக்கும் படங்களின் பெயர்களை எழுதினாலே ஒரு பத்தி முடிந்துவிடும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடிக்கும் படங்களில் ஒன்று தான் ‘100 % காதல்’. தமன்னா, நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘100 % லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.
இயக்குநர் சுகுமாரின் நண்பரான சந்திரமெளலி இப்படத்தை இயக்குகிறார். இவர், தெலுங்கு சினிமாவின் விநியோகஸ்தர் ஆவார்.
விஷயம் என்னனா, இந்த ‘100 % காதல்’ படத்தில் பணியாற்றும் பலருக்கு 10 சதவீதம் கூட சம்பளம் தரவில்லை, என்று இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தெலுங்கில் விநியோகம் செய்து நல்ல லாபம் பார்த்த விநியோகஸ்தர் சந்திரமெளலி தான், தமிழில் இப்படத்தை இயக்கினாலும், தயாரிப்பு தரப்பிலும் அவரது கை தான் ஓங்கியிருக்கிறதாம். அதனால், படத்தின் செலவுகளை குறைப்பதாக சொல்லி, வேலை பார்த்தவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் டபாய்க்கிறாராம். அவரது டபாய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர், நடையோ நடந்து தனது ஊதியத்தை பெற முயற்சித்து ரொம்பவே சோர்ந்து விட்டாராம்.
இறுதியாக படத்தின் உதவி இயக்குநர் ஒருவரை தொடர்பு கொண்டு, தனது ஊதியம் குறித்து கேட்டதற்கு, ”ஆள விடுங்க, அந்த படத்த பத்தி கேட்காதிங்க, எனக்கும் அதே நிலை தான், அதனால அங்கிருந்து வந்துட்டேன்” என்று அந்த உதவி இயக்குநரும் புலம்பியிருக்கிறார்.
இப்படி பலரை ஜி.வி.பிரகாஷின் ‘100 % காதல்’ புலம்ப வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...