தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், தற்போது தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நடிகைகள், நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைவதோடு, பல தொழிலதிபர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி வரும் கமல்ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் நேரடியாக சந்தித்து வருவதோடு, அரசுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அதே சமயம், திரைப்படங்களில் நடிப்பதிலும், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பதிலும் கவனம் செலுத்தி வந்த கமல், சினிமாவில் இருந்து விலகப் போவதாக திடீரென்று அறிவித்திருக்கிறார்.
இது குறித்து கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “2019 நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. ’இந்தியன் 2’ படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன். இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. அப்படத்தின் பின் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் தயாரிக்கவுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்டை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...