பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருவதோடு, புதிதாக நடிக்க வரும் பெண்களும் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறார்கள், என்றும் கூறப்படுகிறது.
இதற்காக காஸ்ட்டீங் இயக்குநர் என்ற போர்வையில் பலர் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், அப்படி ஒரு காஸ்ட்டீங் இயக்குநர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை நாசமாக்கியதாக பெண் ஒருவர் புகார் கூறியதோடு, அந்த நபர் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மோகன் என்ற அந்த காஸ்ட்டீங் இயக்குநர் மீது புகார் கூறிய பெண் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், காஸ்டிங் இயக்குநரான மோகன், தன்னுடைய தோழியையும், மேலும் பல பெண்களையும் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக்கொண்டார். மேலும், வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆசை வார்த்தைக் கூறி மோகன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர், இதனை வெளியில் சொன்னால் அப்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது புகாருக்கு ஆதாரமாக, மோகன் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும், போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னுடைய பெயரை வெளியிட தற்போது அப்பெண் மறுத்து விட்டார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மோகன், தன்னுடைய அறையில் யாரோ சிலர் கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்துள்ளதாகவும், இதனால் தன்னுடைய குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்' கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் போலீசுக்கு சென்றால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த மோகன் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் காஸ்ட்டீங் இயக்குநராக பணியாற்றியிருப்பதால், இவரை போலீச் கைது செய்து விசாரித்தால், இவரிடம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், இவரிடம் விசாரணை நடத்தினால் பல பிரபலங்களின் பெயர்களும் வெளியாகும் என்பதால், தற்போது கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் பலர் பீதியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...