ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திர மேனன். இவரை இப்படி சொல்வதை விட நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் என்றால் அனைத்து தமிழக மக்களுக்கும் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார்.
திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்பு, டாக்குமெண்டரி தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என்று கடந்த 40 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘காளிதாஸ்’, ’பொன் மாணிக்கவேல்’, ‘அடங்கமறு’, ‘லூசிஃபர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இப்படி சினிமாவின் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், சினிமாவை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்கான சில யோசனைகளை காவல்துறைக்கு வழங்கி வருபவர், கண்டய்னர் மூலம் கிராமப் பகுதிகளில் கழிப்பிடம் கட்டிக்கொடுத்திருக்கிறார். இப்படி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசுக்கும் அரசு துறையை சார்ந்த அமைப்புகளுக்கும் வழங்கி வரும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது இளைஞர்கள் நமது நாட்டை பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் அறிந்துக் கொள்வதற்காக மொபைல் ஆப் மூலம் வினா விடை போட்டியை தொடங்கியுள்ளார்.
இதற்காக ‘மை கர்மா’ (My Karma App) என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். இதில் விளையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதோடு, வெற்றி பெறும் ஒவ்வொரு கட்டத்திலும் பரிசாக பணம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மை கர்மா மொபை ஆப் பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய சுரேஷ் சந்திர மேனன், “மை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.
இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.
இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.
90% கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்" என்றார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...