நயந்தாரா, திரிஷா, அமலா பால் வழியில் தற்போது ஹன்சிகாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். அதன்படி, அவரது நடிப்பில் ’மஹா’ என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று வெளியான ‘மஹா’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஒட்டு மொத்த ஹன்சிகா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், சாமியார் வேடத்தில், கையில் கஞ்சாவோடு ஹன்சிகா அமர்ந்திருக்கும் போஸ்டர் தமிழகம் முழுவதும் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும் ரசிகர்கள் ஷாக்கடித்தது போல நின்றுவிடுகிறார்கள். அதுமட்டும் இன்றி, ஹன்சிகா என்ற பெயருக்கு முன்பு ‘இளவரசி’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்களே பட்டப் பெயரை நிராகரிக்கும் போது, நடிகைக்கு இப்படி ஒரு பட்டப் பெயர் தேவையா? என்று ‘மஹா’பட இயக்குநர் யூ.ஆர்.ஜமீலிடம் கேட்டதற்கு, “ஆம், நிச்சயமாக அவர் ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசிவதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க அவர் எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் நிச்சயம் பலன் அளிக்கும்.
இந்த படத்தில் பல குணங்களை கொண்ட மிக சவாலான கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்கிறார். மிகவும் வைரல் ஆன கண்ணாடி போஸ்டர் உண்மையில் சொல்வது, ”கண்ணாடியில் நீங்கள் பார்ப்பது அப்படியே உண்மை இல்லை, இது மாறும்” என்பது தான். இதன் அடிப்படையில் தான் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
லக்ஷம் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர், ஜிப்ரான் போன்ற ஒரு இசையமைப்பாளர் நல்ல படம் கொடுக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் நல்ல படமாகவும், வணிக ரீதியில் வெற்றி படமாகவும் அமையும் என நம்புகிறேன். நல்ல திறமையாளர்களை கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மதி சாருக்கு ஏற்ற வெற்றி இந்த படத்தில் கிடைக்கும்.” என்றார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...