தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயன், நடிப்பதோடு ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அதன்படி, அந்நிறுவனத்தின் முதல் படமாக உருவாகியுள்ள படம் ‘கனா’.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அவரது அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிவகார்த்திகேயனும் இப்படத்தில் தோன்றுகிறார்.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் தான், சிவகார்த்திகேயனும் இப்படத்தில் நடித்திருப்பது தெரிய வந்தது. இருப்பினும், சிவா படத்தில் கெளரவ தோற்றத்தில் தோன்றிருப்பார் என்று கூறப்பட்டாலும், டிரைலரில் அவரது நடிப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் வேடம் குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனம் திறந்தது இதோ,
சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் 'கனா'வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார். ஆனால் இறுதியாக அவர் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என்றார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
'கனா'வின் மையக்கரு பற்றி அவர் கூறும்போது, “கனாவை பெண்களை மையப்படுத்திய ஒரு படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, அது அனைத்துக்குமானது. 'கனவு' மற்றும் ஆசைகள் அனைவருக்க பொதுவானது அல்லவா, அதுபோலவே இதுவும் உணர்வுகள் அடங்கிய குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.” என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் (இசை), தினேஷ் கிருஷ்ணன் பி (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), லால்குடி என். இளையராஜா (கலை), மோகன் ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), சதீஷ் கிருஷ்ணன் (நடன இயக்குனர்) , வின்சி ராஜ் (கிரியேட்டிவ் டிசைன்ஸ்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்) மற்றும் பல்லவி சிங் (காஸ்ட்யூம்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...