தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்திருக்கும் யோகி பாபு ‘தர்மபிரபு’ என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார். எமலோகத்தை பற்றிய நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தை முத்துகுமரன் இயக்க, பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக, சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் சுமார் ரூ.2 லட்சம் செலவில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும், என்ற கற்பனையில் இந்த படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளங்களும் அமைக்கப்படவுள்ளது.
இந்த படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் சுமார் 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
இதில் மகன் எமனாக யோகி பாபு நடிக்க, அவரது அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு யோகி பாபுவுடன் நடனம் ஆட கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்த மேக்னா நாயுடு, ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த நிலையில், யோகி பாபுக்காக அவரை படக்குழு தேடி பிடித்திருக்கிறது.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...