தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஜாம்பி காமெடி படத்தில் கதையின் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். அவருக்கு இணையான வேடத்தில் பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்.
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம், வி.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை புவன் நல்லான்.ஆர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘மோ’ என்ற ஹாரார் காமெடி படத்தை இயக்கியிருக்கிறார்.
கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என அனைத்தும் இப்படத்தின் கதை தான். ஒரே இரவில் நடக்கும் ஹாரார் - காமெடி படமான இப்படத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் படமான ‘லைப் ஆஃப் பை’ படத்தில் நடித்த டி.எம்.கார்த்திக், மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர், ‘நண்பன்’, ‘இன்று நேற்று நாளை’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பாராட்டு பெற்றிருக்கிறார். இவர்களுடன் மனோ பாலா, ‘கோலமாவு கோகிலா’ அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், மியூசிக்கலி புகழ் சித்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
‘பார்ட்டி’ படத்தை தொடர்ந்து பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் கலையை நிர்மாணிக்கிறார். தினேஷ் எடிட்டிங் செய்ய, ஓம்பிரகாஷ் சண்டைப்பயிற்சியை வடிவமைக்கிறார். பாலா அன்பு இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...