‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தொடர்ந்து விமல் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘புரோக்கர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சதா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கிய மஜீத் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜயின் ‘தமிழன்’, ‘பைசா’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ‘அண்ணாதுரை’ படத்தில் ஹீரோயினாக நடித்த டயானா சாம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்மந்தப்பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமிருக்காது, என்று கூறும் இயக்குநர், படம் முழுவதும் நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்திருப்பதால், காமெடி திருவிழாவாகவும் படம் இருக்கும், அதனால் நம்பி வாங்க சந்தோஷமாக போங்க, என்றார்.
கான்பிடண்ட் பிலிம் கேஃப் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...