Latest News :

பெண் தேடும் நடிகர் அருண்ராஜா காமராஜ்!
Wednesday August-30 2017

அருண்ராஜா காமராஜ், என்று சொல்வதை ’விட நெருப்புடா...’ என்று சொன்னால் தான் இவரை தெரியும். ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்த அருண்ராஜா காமராஜ், பல படங்களில் பாடல்கள் எழுதி, பாடுவதுடன், பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ என்று பல படங்களில் நடித்திருப்பதால் இவர் பாடகர் மற்றும் நடிகர் மட்டுமல்ல, இயக்குநரும் தான்.

 

அருண்ராஜா காமராஜ், சினிமாவுக்குள் எண்ட்ரியானதே படம் இயக்கத்தான். பல குறும்படங்களை இயக்கி, குறும்பட போட்டிகளிலும் கலந்துக்கொண்ட இவர், சிம்பு நடித்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். படம் இயக்கும் லட்சியத்தோடு கோடம்பாக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர், நடிக்கவும் பாடவும் கிடைத்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி அதில் வெற்றி வாகை சூடினாலும், தனது லட்சியமான படம் இயக்குவதில் தற்போது முழு மூச்சில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

 

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை ஒன்றை எழுதியுள்ள அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டை எப்படி நாடு கொண்டாடியதோ அதைப்போல தனது படத்தையும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதாக கூறுகிறார்.

 

கனவுகளுக்காக போராடுவதும், அதற்கு குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை, ஒரு தந்தைக்கும், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இடையே உள்ள உணர்வூப்பூர்வமான போராட்டத்தை திரைக்கதையாக கொண்ட இப்படத்தில் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் சேர்த்துள்ளாராம்.

 

தற்போது இப்படத்திற்கான நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ள அருண்ராஜா காமராஜ், கிரிக்கெட் ஆட தெரிந்ததுடன் நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகியாக்கவும், பிற கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கவும் ஆடிஷன் நடத்த உள்ளார். 

 

இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்ட களம் இல்லையே, என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களா நீங்கள்? அப்போது உடனே அருண்ராஜ் காமராஜாவின் இந்த ஆடிசனில் கலந்துக்கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

 

விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை iswearicanact@gmail.com என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Related News

391

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery