பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாரி 2’. வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ல இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னியில் நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இல்லை என்றால், என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும், என்று உருக்கமாக பேசினார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய தனுஷ், “மாரி 2 பக்கா குடும்ப கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். இதில் காதல், காமெடி, நல்ல கதை, வில்லன் எல்லாம் உண்டு. எனக்கு வடசென்னை படத்தை விட மாரி படத்தில் நடிப்பது தான் சவாலாக இருந்தது. மாரியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாரி கெட்டப்பில் வந்து அவர் போன்றே பேச நினைத்தேன். ஆனால் சர்ச்சையை தவிர்க்க அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன்.
இயக்குனர் பாலாஜி மோகன் என் குடும்பத்தில் ஒருவர் போன்று. ஃபார்மாலிட்டிக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பவில்லை. 'If you are bad, I'm your dad' என்ற வசனம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அந்த வசனத்தை கூறியதே அடிதாங்கி வினோத் தான். நான் இல்லை. விவாதம் ஒன்றின்போது அவர் தான் பரிந்துரை செய்தார்.
சில பேர் தப்பா நினைத்தாலும் பரவாயில்லை . 20 வருடமாக எதிர்ல இருக்கும் இசையமைப்பாளரின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது. ஆனால் யுவன் அப்படியே இருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யுவன் இல்லை என்றால் நான் இல்லை. என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே யுவன் ஷங்கர் ராஜா தான். அது மட்டும் அல்ல காதல் கொண்டேன் வெற்றிக்கும் அவரே காரணம். அவர் அஜித் சார் படத்திற்கு இசையமைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
சாய் பல்லவி இயற்கையாகவே அழுவார். படப்பிடிப்பு தளத்தில் அழச் சொன்னதும் அழுவார். ஏதோ மெதட் நடிகை என்று நினைத்தேன். மாரி 2 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு மாரி 3 எடுப்போம். இந்த படத்தை சர்வதேச அளவில் எடுத்துள்ளோம், மக்களுக்கு தேவையான மெசேஜ் உள்ளது என்று எல்லாம் சொல்ல மாட்டேன்.
தம்பி சிவகார்த்திகேயனின் ‘கனா’, நண்பர் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி' உட்பட இந்தவாரம் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...