இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுமாகிறார்.
’பன்னீர் புஷ்பங்கள்’, ‘மெல்ல பேசுங்கள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’குணா’, ‘சின்ன மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதியும், தந்தை வழியில் தமிழ் சினிமாவில் இயக்குநராக உள்ளார். இவரும் தனது தந்தையை போல சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குநர் விஜயிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கும் சஞ்சய் பாரதி, தான் இயக்கும் முதல் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு உள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...