தான் ஒரு தலித் சிந்தனையாளர் என்பதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளும் இயக்குநர் பா.ரஞ்சித், அதை தனது திரைப்படங்கள் மூலமாகவும் அழுத்தமாக சொல்பவர். இதற்காக, அவருக்கு பல்வேறு தரப்பில் எந்த அளவுக்கு ஆதரவு வருகிறதோ, அதை விட அதிகமாக எதிர்ப்புகளும் வந்துக் கொண்டிருக்கிறது. எது வந்தாலும், தான் செய்ய வேண்டியது இது தான், என்பதில் தெளிவாக இருக்கும் ரஞ்சித், தனது நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற பெயரில் சென்னையின் முக்கிய கலைகளில் ஒன்றான கானா இசை பாடலை மேடையேற்றினார்.
இந்த கானா பாடல் இசை நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, பெரிய விவாதங்களையும் உருவாக்கிய நிலையில், நீலம் பண்பாட்டு மையம் மூலம் ‘வானம் கலைத்திருவிழா’ என்ற தலைப்பில் டிசம்பர் மாத நிகழ்ச்சி ஒன்றை இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்திருக்கிறார்.
டிசம்பர் 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாடகம், இசை, நடனம் என மூன்று கலைகளும் அரங்கேற உள்ளது. மேலும் இதன் இறுதிக்கட்ட நிகழ்வான டிசம்பர் 31 ஆம் தேதி ‘மகிழ்ச்சி’ என்ற தலைப்பில் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக் குழுவின இசை ஆல்பம் ஒன்றும் வெளியிடப்படுகிறது. 8 பாடல்கள் கொண்ட இதில் ஒரு பாடல் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை பா.ரஞ்சித்தே இயக்கியுள்ளார்.
இப்படி தொடர்ந்து தனது நடவடிக்கை மேலும் பல விவாதங்களை ஏற்படுத்தும் பா.ரஞ்சித்தின் இந்த மார்கழி மாத கலை நிகழ்வும் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மார்கழி மாதத்தில் நடைபெறும் கர்நாடக இசை நிகழ்வுகளுக்கு போட்டியாக தான் அவர் இத்தகைய ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது தான் அது.
இது குறித்து, நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறு வயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. மேடை ஏற்றப்படாத பல கலைகளைப் பற்றி நான் யோசிக்கும் போது அதெல்லாம் கலைகள் இல்லையா, என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கலைவிழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிட வேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலைவழியே அதை சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம்.
விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப் பேசும் புத்தகங்களைக் கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் ‘மகிழ்ச்சி’ வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது. கலைகளின் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னெடுக்க வேண்டும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலைவிழாவின் முக்கிய நோக்கம்.
டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும் போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான் காரணம்.” என்று தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (சவேரா ஓட்டல் எதிரில்) உள்ள சி.எஸ்.ஐ செயிண்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடக்கும் வானம் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கட்டணம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...