தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘சர்கார்’ பல சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், படம் வெளியாவதற்கு முன்பாக டிஜிட்டல் உலகில் பல்வேறு சாதனைகளை செய்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும் உண்டு.
தற்போது 2018 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், சர்கார் மூலம் விஜய் யாரும் அசைக்க முடியாத சாதனையோடு இந்த ஆண்டை நிறைவு செய்கிறார்.
ஆம், “ஒரு விரல் புரட்சி” பாடல் இணையத்தில் பெரும் புரட்சி செய்த நிலையில், தற்போது இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ, “Most anticipated video of the year” என்ற சிறப்பை பெற்றுள்ளதாக பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...