தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக ‘தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவுக்கு சங்கத்தின் புரவலர் அபிராமி ராமநாதன், தலைமை தாங்கினார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி சங்கத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், பொது செயலாளராக ஆர்.பன்னீர் செல்வமும், பொருளாளராக டி.சி.இளங்கோவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அறிவித்து அமைச்சர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான நல்லரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...