தமிழ் சினிமாவின் தற்போதைய வைரல் குரலாகியிருக்கிறது பின்னணி பாடகர் ஜெகதீஷின் குரல். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான ஜெகதீஷ், தொடர்ந்து ‘காஞ்சனா 2’, ‘கொடிவீரன்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘ஜுங்கா’, ‘காளி’ உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இசையமைப்பாளர்கள் சத்யா, என்.ஆர்.ரகுநந்தன், சி்த்தார்த் விபின், அம்ரீஷ், ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வரும் ஜெகதீஷ், ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் பாடியுள்ள “ஐ வாண்ட் டூ மேரி மாமா...” என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
பாடல் வெளியாகி ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது, ஜெகதீஷுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும் நிலையில், இந்த பாடல் பிரபு தேவாவின் பேவரைட் பாடலாகியிருப்பதை நினைத்து இன்னும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
நடனப் புயல் பிரபு தேவாவுக்காக உருவாக்கப்பட்ட பாடல் என்றால், அதை பாடுபவரின் உற்சாகத்தை பொருத்து தான் மாஸ்டரின் நடனம் இருக்கும் என்பதால், ஜெகதீஷ் மிரட்டியிருக்கிறார். அவரது குரலை கேட்ட பிரபு தேவா, ஜெகதீஷை பாராட்டியதோடு, “இந்த பாடலை இவர் பாடினால் தான் நன்றாக இருக்கும்” என்றும் கூறியிருக்கிறார்.
மெலொடியாகட்டும், குத்துப் பாடல் ஆகட்டும், தனது காந்த குரலால் பாடல்களை மக்கள் மனதில் பதிய வைத்துவிடும் பாடகர் ஜெகதீஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம் இசைப் பள்ளியில் பயின்றவர். மேலும், ரஹ்மான் இசையமைத்த பல பக்தி ஆல்பங்களில் பாடி அவரிடம் பாராட்டும் பெற்றுள்ளார். விரைவில் ரஹ்மான் சாரின் இசையில் சினிமாவில் பாடுவேன், என்று நம்பிக்கையோடு கூறும் ஜெகதீஷ், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம் சி.எஸ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாட வேண்டும் என்பதை தனது கனவாக வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் ஜெகதீஷ், முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவதை போல, புதிதாக வரும் பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார். சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து இசையமைப்பாளர்களின் அழைப்பையும் ஏற்று பாடிக் கொடுப்பவர், அனைவரிடத்தில் இருந்தும் பல விஷயங்களை கற்று வருவதாக, பெருந்தன்மையாக கூறுகிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...