சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘சைக்கோ’ என்ற படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினுக்கு படம் இயக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், உதயநிதி நடிக்கும் படத்திற்கு ஆபத்து வந்துள்ளது.
சினிமா பைனான்சியர் ரகுநந்தன் என்பவர், இயக்குநர் மிஷ்கினுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தன் மகன் ஷியாம இவைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குநர் மிஷ்கினுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டதாகவும். அதற்காக, இயக்குநர் மிஷ்கினுக்கு ரூ.1 கோடி முன் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தப்படி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், அதே கதையை பயன்படுத்தி வேறு படம் எடுத்து வருவதாகவும் இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குநர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இந்த தடை உத்தரவால், உதயநிதி நடித்து வரும் ‘சைக்கோ’ படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...