தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை தயாரிப்பவர் என்ற பெருமையை பெற்றவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இவர் தயாரிக்கும் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதோடு, ஓரளவு ஓடக்கூடிய படங்களாகவும் அமைந்துவிடும். அந்த அளவுக்கொ தொட்டதெல்லாம் வெற்றி தான், என்று பெயர் எடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.
இவரது முதல் படம் என்பதால் ‘மாயவன்’ படத்தின் திரைக்கதையில் நலன் குமாரசாமி உள்ளிட்ட சில இயக்குநர்கள் பணிபுரிந்துள்ளதோடு, பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், செப்டம்பர் 1 ஆம் தேதி ‘மாயவன்’ ரிலீஸ் ஆவது கஷ்ட்டம் தான் என்று கூறப்படுகிறது.
தான் தயாரித்த படங்கள் அனைத்தையும் எந்தவித குழப்பமும் இன்றி சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து வந்த, சி.வி.குமார், இந்த படத்தின் ரிலீஸில் மட்டும் ஏன் இப்படி தடுமாறுகிறார், என்று கோடம்பாக்கம் முழுவதுமே பேச தொடங்கியுள்ளார்கள். அதிலும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா போன்ற ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் அவருடன் இருக்க, படத்தை ரிலீஸ் செய்ய அவன் யோசிப்பது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது.
அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீஸ் ஆவதால், தனது படத்தின் ரிலீஸ் தேதியை சி.வி.குமார் மாற்றினார் என்றால் ஓகே, ஆனால் இந்த வாரம் பெரிய நடிகர்கள் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதிலும் நான்கு படங்கள் மட்டுமே வெளியாகும் போது, இந்த வாரமும் தனது படத்தை ரிலீஸ் செய்ய சி.வி.குமார் தயங்குவதைப் பார்த்தால், அவரது படம் காலி டப்பாவாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றி பந்தாவான ஸ்டேட்மெண்ட் ஆகியவை இருந்தால் படத்தை வெற்றி பெறச்செய்துவிடலாம் என்று நினைத்த சி.வி.குமார் ‘விவேகம்’ படத்தின் ரிசல்டால் பயந்துட்டாரோ என்னவோ.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...