வி.ஜே-வாக தங்களது வாழ்க்கை தொடங்கிய பிரஜின் மற்றும் சாண்ட்ரா எமி, தற்போது தம்பதிகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களிடம் பிரபலமான இவர்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிறகு சினிமாவில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று பிரஜின் எப்படி பயணிக்கிறாரோ அதுபோல அவரது மனைவி சாண்ட்ராவும் சினிமாவில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரும் சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாமல், அதற்கான முயற்சியில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, பிரஜின் - சாண்ட்ரா தம்பதியிடம் பெரும்பாலான ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி, “திரையில் எப்போது ஜோடியாக நடிக்க போகிறீர்கள்?” என்பது தான். இந்த கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்திருக்கும் பிரஜின் மற்றும் சாண்ட்ரா, நாங்கள் இருவரும் ஜோடியாக குறும்படம் ஒன்றில் நடித்தோம். அந்த குறும்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாண்டிராஜ் எங்களை அழைத்து, இதேபோல் ஜோடியாக படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நாங்களும் ஓகே சொன்னோம், ஆனால், என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது.
ஆனால், தற்போது அது நடந்திருக்கிறது. பிரபு சாலமனிடம் அசோசியட்டாக பணியாற்றிய பால் என்பவர் இயக்கத்தில் நாங்க இரண்டு பேரும் ஜோடியாக நடிச்சிருக்கோம். த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில், ரியல் லைப்பில் நாங்க எப்படி வாழ்கிறோமோ, அப்படியான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறோம். அதனால, இந்தப்படம் எங்க கரியர்ல முக்கியமமான படமாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.
நிஜ வாழ்க்கை ஜோடியான இவர்கள், ரீல் சினிமாவிலும் ஜோடியாக நடித்த அனுபவத்தை எண்ணி ரொம்பவே குஷியாடைந்திருக்கிறார்களாம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...