சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் ‘என் காதலி சீன் போடுறா’. ’அங்காடி தெரு’ மகேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷாலு என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய் டிவி கோகுல் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக நிஷா நடித்திருக்கிறார்.
வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். ராம்ஷேவா, ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சோலை அன்பு கலையை நிர்மாணிக்க, சிவா லாரன்ஸ், சாண்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். மிரட்டல் செல்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, மாரிஸ் எடிட்டிங் செய்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வையை தண்டபாணி கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்சேவா இயக்கியிருக்கிறார். இவர், ஏற்கனவே ராமகிருஷ்ணன் நடித்திருக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ராம்சேவா கூறுகையில், “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்...சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.
நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். ”நிலா கல்லுல செதுக்கிய சிலையா” என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...