Latest News :

இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்! - முதலிடத்தில் விஜய்
Thursday December-27 2018

விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் என்று தமிழ் சினிமாவின் முக்கியமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே அவ்வபோது வசூல் ரீதியாக போட்டி ஏற்பட்டாலும், இது பெரும்பாலும் ஜெயிப்பது என்னவோ  விஜயாக தான் இருக்கிறார். தொடர்ந்து இரண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் பிரபலமாக உள்ளார்.

 

இப்படி விஜய் ஒவ்வொரு முறையும் தனது படத்தின் மூலம் வசூலில் புதிய சாதனையை படைக்க அதை முந்தும்  வகையில் ரஜினிகாந்தின் படங்களும் வருகின்றன. இருப்பினும் சில நேரங்களில் ரஜினியால் கூட விஜயை முந்த முடியாமல் போவது தான் உண்மை. அப்படி ஒரு உண்மை மீண்டும் நிகழ்ந்திருப்பதால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமடைந்துள்ளனர்.

 

ரஜினிகாந்தின் 2.0 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான படம் என்பதால், அப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டனர். படமும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தமிழகத்திலும் பெரும் வசூலை ஈட்டு வந்தது. இருப்பினும் ஒரு ஏரியாவில் 2018 விஜயின் சர்கார் படத்தின் வசூலை ரஜினியின் 2.0 படத்தால் முந்த முடியவில்லை.

 

அதாவது, கோயமுத்தூர் பகுதி திரையரங்குகளின் 2018 ஆம் ஆண்டு கலெக்‌ஷன்படி அதிகமாக வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜயின் ’சர்கார்’ முதலிடத்தை பிடிக்க, ரஜினிகாந்தின் 2.0 இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

 

’கடைக்குட்டி சிங்கம்’ மூன்றாவது இடத்தையும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ நான்காவது இடத்தையும், ‘காலா’ ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

 

இதே அந்த பட்டியல்,

 

Top 10 List

 

 

Related News

3959

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery