தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த உதயநிதி, ஹீரோக்கள் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்ட போதிலும், தான் நடிக்கும் படங்களை தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து வந்தவர் முதல் முறையாக தனது சொந்த நிறுவம் தவிர்த்து வேறு ஒரு நிறுவனத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
’இப்படை வெல்லும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ‘தூங்கா நகரம்’, ’சிகரம் தொடு’ ஆகிய படங்களை இயக்கிய கெளரவ் இயக்குகிறார். மஞ்சுமா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
ஆனால், அவர் நடிகராக அல்ல, பின்னணி குரல் கலைஞராக, ஆம், இப்படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுக்கப் போகிறார். இது தொடர்பாக இயக்குநர் கெளரவ், விஜய் சேதுபதியை அனுகி கேட்டதுடன், சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். அந்த காட்சிகளைப் பார்த்த அவர் உற்சாகமடைந்து உடனே பின்னணி குரல் கொடுக்க சம்மதித்து விட்டாராம். விஜய் சேதுபதி தங்களது படத்தில் பங்குகொள்வது தங்களுக்கு பெருமையாக உள்ளது என்று இயக்குநர் கெளரவ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...