Latest News :

’மெரினா புரட்சி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய சிங்கப்பூர் அரசு!
Friday December-28 2018

ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்திற்கு சிங்கப்பூர் அரசு தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

தமிழகத்தின் பாரம்பரியங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு விதிக்கபப்ட்ட தடையை நீக்குவதற்கு தமிழகம் மட்டும் இன்றி உலகத்தில் உள்ள அத்தனை தமிழகர்களும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் 8 நாட்களாக நடைபெற்ற போராட்டம் உலகத்தின் பார்வையை சென்னை பக்கம் திருப்பியது. வரலாற்று நிகழ்வாக அமைந்த இந்த போராட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை நீக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போதும் போல நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே, இந்த வரலாற்று சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் தான் ‘மெரினா புரட்சி’.

 

இப்படம் முழுவதும் முடிவடைந்து தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் குழுவிக்கு திரையிடப்பட, எந்த வித காரணமும் சொல்லாமல், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க இரண்டு முறை மறுத்துவிட்டார்கள். இதை தொடர்ந்து தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது.

 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”’மெரினா புரட்சி’ திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும்” என்று தயாரிப்பு தரப்பு கோரியிருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதியும், இந்த வழக்கு தொடர்பாக தணீக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது. சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities ’மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ், ”தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம்” என்று குறிப்பிட்டிருக்கிறாரகள்.

 

உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு மெரினா புரட்சியை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.

Related News

3967

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery