கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய சின்மயி, அவ்வபோது சில ட்விட்டர் பதிவுகளின் மூலம் தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவர் கூறிய பாலியல் புகாருக்கு சினிமா நடிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் திடீரென்று டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கத்திற்கு டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த ராதாரவி, சின்மயி பல ஆண்டுகளாக சந்தா கட்டாமல் இருந்ததால் அவரை நீக்கியிருக்கிறார்கள், என்று விளக்கம் அளித்தார். அதே சமயம், டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்தால் தான் திரைப்படங்களில் டப்பிங் பேச முடியும், என்பதால் சின்மாயி இனி தான் டப்பிங் பேசப்போவதில்லை, என்று கூறியதோடு, 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசியதே தனது கடைசிப் படம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, டப்பிங் கலைஞர்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் யூனியன் எடுத்துக் கொள்கிறது, என்று சின்மயி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த டப்பிங் யூனியன் நிர்வாகிகள், இது குறித்து அளித்த விளக்கத்தில், ”சின்மயி ரூ.1.5 லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்துக்கொள்வோம்”, என்று தெரிவித்திருக்கிறது.
இந்த செய்தியை சுட்டிக்காட்டி சின்மயி ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது.
ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன்.
யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...