தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரித்தி ஜோடிக்கு கடந்த 27 ஆம் தேதி சென்னையில் காலை திருமணமும், மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், விஜய், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட சினிமா பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமண விழாவில் நேரில் கலந்துக் கொள்ளவில்லை என்றாலும், புதுமண தம்பதியருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இந்நிலையில், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று விஷால் மற்றும் அவரின் தங்கை ஐஸ்வர்யா-க்ரிதிஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”விஷாலுக்கு தலைமைப் பண்பு உள்ளது. சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.” என்று தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...