இன்று நள்ளிரவோடு 2018 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில், பல துறைகளில் இந்த ஆண்டு மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து திரும்பி பார்க்கையில், சின்னத்திரையில் முக்கிய நிகழ்வாக ஆல்யா மானசாவின் காதல் மற்றும் காதல் முறிவு பற்றியும் பேசப்படுகிறது.
மக்களிடம் பிரபலமாக உள்ள சின்னத்திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக இருப்பவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவர், டப்மாஸ் மூலமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவரின் மனதை கொள்ளையடித்தது மானஸ்.
ஆல்யா மானசா என்ற பெயருக்கு பொருத்தமான ஜோடியாக அமைந்த மானாஸிடம் முதலில் காதலை தெரிவித்த ஆல்யா மானசா, தற்போது அவரது காதலை முறித்துக்கொண்டு ராஜா ராணி சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், நாம் இப்போது சொல்லப் போவது, ஆல்யா மானசாவின் முதல் காதல் முறிவுக்கான காரணம்.
ராஜா ராணி சீரியலில் கமிட்டாவதற்கு முன்பாகவே டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ஆல்யா மானசாவும், மானஸும் நெருக்கமாகி பிறகு தங்களது காதலை வெளிப்படையாகவும் அறிவித்த நிலையில், திடீரென்று இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை பிறகு இவர்களது காதல் உடையும் அளவுக்கு பெரிதானது. இதன் பிறகு மானஸ் தனது தோழி சுபிக்ஷாவுன் நெருக்கம் காட்ட தொடங்கி தற்போது அவரை திருமணமும் செய்துகொள்ள இருக்கிறார். அதேபோல், ஆல்யா மானசாவும், சஞ்சீவை காதலிப்பது குறித்து வெளிப்படையாக அறிவித்ததோடு, ராஜா ராணி சீரியல் முடிந்ததும் திருமணமும் செய்துகொள்ளப் போகிறார்.
இந்த நிலையில், ஆல்யா மானசா - மானாஸ் காதல் உடைய இருவருக்கும் இடையே இருந்த ஈகோ தான் காரணம், என்று கூறும் அவரது நண்பர்கள், அவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்தும், சிலர் அவர்களின் காதலில் பல வில்லங்கத்தை ஏற்படுத்தினார்களாம். அதை அறியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்க, ஒரு கட்டத்தில் அவர்களது கோபத்தை அதிகரிக்கும் வகையில் சிலர் பார்த்த சில வேலைகளால் அவர்களது காதல் முறிந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
அதே சமயம், ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா நடிக்க கூடாது, என்று மானஸ் கட்டுப்பாடு விதித்ததாகவும், அதனால் தான் இருவருக்கும் இடையே பிரச்சினையே ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
எது எப்படியோ, 2019 ஆம் ஆண்டில் ஆல்யாவும், மானஸும் புதிய ஜோடியுடன் தங்களது புது வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க நாம் வாழ்த்துவோம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...