சினிமாவுக்கு நிகராக டிவி நடிகர், நடிகைகளும் மக்களிடம் பிரபலமாகி வரும் நிலையில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்து ஏராளமானவர்கள் புகழ் பெற்று வருகிறார்கள். ஷாருக்கான், மாதவன், சிவகார்த்திகேயன், பிரியானி பவானி சங்கர் என்று பலர் இத்தகைய வழியில் வந்த நிலையில், இவர்களது வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் திவ்யா கணேஷ்.
இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ் பெண்ணான திவ்யா கணேஷ், ஏராளாமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஏற்கனவே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் நிலையில், தற்போது வெள்ளித்திரையிலும் நட்சத்திரமாக ஜொலிக்க உள்ளார்.
மோகன்லாலின் அண்ணன் மகன் ஹீரோவாக நடிக்கும் மலையாளப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கும் திவ்யா கணேஷ், தெலுங்குப் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், தமிழ்ப் படம் ஒன்றிலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஆரம்பத்திலேயே தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழித்திரைப்படங்களில் நடிக்க தொடங்கினாலும், தனது தாய்மொழியான தமிழில் ஏராளமான படங்களில் நடிக்க வேண்டும், என்பது தான் திவ்யா கணேஷின் கனவாம். அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...