இயக்குநர் பா.இரஞ்சித் உருவாக்கிய கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் இசை மற்றும் வீடியோ ஆல்பமான ‘மகிழ்ச்சி’ பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.
பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த மாதம் 29,30,31 ஆகிய மூன்று நாட்களுக்கு ‘வானம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வந்தது. நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல்கள், தெருக்கூத்து, தனி இசைக்கலைஞர்களின் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, இதுவரை மேடை ஏறாத பல கலைஞர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதி நாளானா நேற்று, கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக் குழுவினரின் முதல் இசை ஆல்பமான மகிழ்ச்சி வெளியிடப்பட்டதோடு, அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும், கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக்குழுவினர் மேடையில் பாடினார்கள். மேலும், ஆல்பத்தில் உள்ள ஒரு வீடியோ பாடலும் திரையிடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கிராமத்து பாடகி சின்னபொண்ணு, பாடகர்கள் யோகிபி, பவுல் ஜேக்கப், நடிகை ரித்விகா, நடிகர்கள் கலையரசன், ஜானி, பாடலாசிரியர் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ஆல்பத்தை வெளியிட்டனர்.
இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இதில் மகிழ்ச்சி என்கிற பாடலை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நடன இயக்குநர் சாண்டி குழுவினர் இதில் நடனமாடியுள்ளனர். நடிகர் கலையரசன், ஜானி, லிங்கேஸ் உள்ளிட்டோரும் இதில் நடனமாடியுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய பா.இரஞ்சித், “நமது சமூகத்தில் ஏற்றத்தாழவு, சாதி, வர்க்கம் என்று சமத்துவமில்லாத மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை அகற்ற நமது கலைகள் வழியாக ஒரு மாற்றத்தை உண்டுபண்ண நமக்குள் இருக்கும் சாதி, மதம், வர்க்கம் இவற்றை களைந்து சமத்துவமாக இந்த புத்தாண்டை கொண்டாடவே இந்த நிகழ்ச்சி. வெற்றிகரமாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போன்ற சமத்துவ விழாக்களை நாம் நடத்துவோம்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...