Latest News :

பஞ்சாப், ஹரியானாவில் நடைபெறும் நிஜ கபடி போட்டியில் படமாகும் ‘கென்னடி கிளப்’!
Tuesday January-01 2019

‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநரானார். தற்போது பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கி வருபவர், பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

 

சசிகுமார் மற்றும் இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், புதுமுகம் மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, ஸ்ம்ரிதி, செளந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

 

நிஜ கபடி போட்டி நடைபெறும் இடங்களில் படமாகி வரும் இப்படத்திற்காக இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படக்குழு படப்பிடிப்பு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, அங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.

 

மேலும், பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.

 

அதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக 'செட்' அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெறும்.

 

Kennady Club

 

சர்வதேச அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் சீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு ரூ.2 கோடி விற்பனையாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாகவே இத்தகைய தொகைக்கு விற்பனையானது மிகப்பெரிய சாதனையாகும்.

 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். பி.சேகர் கலையை நிர்மாணிக்கிறார். 

 

தற்போது இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள ‘கென்னடி கிளப்’ வரும் தமிழ் புத்தாண்டுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Related News

3989

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery