பெரிய ஹீரோக்கள் படம் வெளியாகும் போது மற்ற படங்களை ரிலீஸ் செய்வதில்லை. அதன்படி தான் அஜிதிதின் ‘விவேகம்’ வெளியானதால் கடந்த இரண்டு வாரமாக தமிழ் சினிமாவில் எந்த படமும் வெளியிடப்படாத நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நான்கு படங்கள் வெளியாகியின்றனர்.
இதற்கிடையே, வரும் தீபாவளி பண்டிகைக்கு விஜயின் ‘மெர்ச’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அப்படக்குழுவினர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததிருந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தா’ படமும் தீபாவளி ரிலீஸ் ஆகிறது. மேலும், அர்ஜுன் இயக்கியுள்ள ‘சொல்லிவிடவா’, கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஹர ஹர மகாதேவகி’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் தீபாவளியன்று வெளியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மெர்சல்’ படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டால், அப்படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதோடு, அதிகப்படியான திரையரங்கங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்படி தீபாவளிக்கு மேலும் பல படங்கள் வெளியாவதால், தீபாவளி ரேஸ் பெரும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகம் மட்டும் இன்றி ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...