பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
ஆப்கானிஸ்தானில் பிறந்த காதர் கான் 1973-ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடித்த ’தாக்’ என்ற படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காதர் கான், 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
மூச்சுத்திணறல் காரணமாக கனடாவில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரவிது. இந்த நிலையில், காதர் கான் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதர் கான் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் கனடாவில் உள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்குகளையும் கனடாவிலேயே நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...