சிவகார்த்திகேயன் வழியில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரியாகியிருக்கும் மா.கா.பா.ஆனந்த், தொலைக்காட்சியில் காமெடியான தனது காம்ப்பயரிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், வெள்ளித்திரையிலும் தனது காமெடியான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
’நவரச திலகம்’, ‘கடலை’, ‘அட்டி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாணிக்’. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், படத்தின் டைடிலும், ஆனந்தின் கெட்டப்பும் தான். இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் டிரெண்டான இப்படத்தின் டிரைலரும் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், வரும் ஜனவரி 4 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
நாளைய இயக்குநர்கள் போட்டியில் வெற்றிவாகை சூடியதுடன், பல விருதுபெற்ற குறும்படங்களையும் இயக்கியிருக்கும் மார்டின், இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். தரண்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்திருக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
பேண்டசி காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி, ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்தும், வத்சன் வீரமணியும், பெரிய விஷயம் ஒன்றில் சாதிப்பதற்காக, ஆசிரமத்தை விட்டு வெளியேற, அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பதை பேண்டசியாகவும், காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...