உச்சத்தில் இருந்த சினிமா பிரபலங்கள் சிலர், தங்களது இறுதி காலத்தில் மோசமான சம்பவங்களை எதிர்கொண்டு வாழ்ந்தும், வாழ்க்கையை முடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதுபோல, நடிகைகள் பலர் சில தவறான தொடர்புகளால் நோயால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால், இதில் இருந்து பலர் மீண்டு வந்தாலும், சிலர் மீள முடியாமல் மாண்டுபோன கதைகளும் திரையுலகில் ஏராளாம்.
இந்த நிலையில், இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, தனது மோசமான வாழ்க்கை முறையால், தான் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன், என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
1990 களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மனிஷா கொய்ராலா, ‘இந்தியன்’, ‘பம்பாய்’, ‘முதல்வன்’ போன்ற படங்களின் மூலம் கோலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.
இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, பல போராட்டங்களுக்கு பிறகு நோயில் இருந்து மீண்டுள்ளார். இதை தொடர்ந்து தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையும், அதில் இருந்து மீண்டும் வந்ததையும் ‘ஹீல்டு’ என்ற சுயசரிதைப் புத்தமாக அவர் எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில், “கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன்.
நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன்.
அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...