அஜித்தின் ‘விஸ்வாசம்’ தீபாவளியன்றே வெளியாக வேண்டிய படம் என்றாலும், பொங்கலுக்கு கலக்கலாக வருகிறோம் என்று இயக்குநர் சிவா கூறியது போலவே பொங்கல் வெளியீடு என்று தற்போது விளம்பரம் படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், ரஜினியின் ‘பேட்ட’ படமும் பொங்களுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தின் டிரைலர் ரஜினி ரசிகர்களை மட்டும் இன்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதிரடி காட்சிகளும், ஆக்ரோஷமான வசனங்களும், ரஜினிகாந்தின் பழைய ஸ்டைல் என டிரைலர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு, கார்த்திக் சுப்புராஜ் படங்கள் என்றாலே எதாவது ஸ்பெஷல் இருக்கும், அதிலும் ரனிஜியை வைத்து அவர், நிச்சயம் எதாவது மேஜிக் செய்திருப்பார், என்ற பேச்சும் அடிபடுவதால், ‘பேட்ட’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
பேட்ட படத்தின் இத்தகைய வரவேற்பால் ‘விஸ்வாசம்’ ஏரியா சற்று தடுமாறியதோடு, பேட்ட டிரைலர் வெளியான சில நாட்களில் தங்களது படத்தின் டிரைலரையும் வெளியிட்டது. வழக்கம் போல அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் டிரைலரை கொண்டாடினாலும், பேட்ட படத்தை காப்பியடித்து கட் பண்ண டிரைலர் போலவே விஸ்வாசம் டிரைலர் இருப்பதாகவும், புதிதாக எதுவும் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
மேலும், ரஜினியை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த சமயத்தில் விஸ்வாசம் படம் ரிலீஸானால் அது தோல்விப்படமாக தான் இருக்கும் என்று பலர் பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே விவேகம் படத்தால் ஏற்பட்ட நஷ்ட்டத்தை ஈடு செய்யவே, சத்யஜோதி நிறுவனத்திற்கு அஜித் இந்த படத்தில் நடித்துக்கொடுத்திருக்கும் நிலையில், இந்த படமும் தோல்விப்படமாக அனைந்துவிட்டால் என்ன செய்வது, என்ற அடிப்படையில் யோசிக்கும் தயாரிப்பு தரப்பு, படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்ய யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இதுவரை விஸ்வாசம் படத்தின் முன் பதிவு தொடங்காததால், அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியிருக்க, அவர்களது அப்செட்டை அதிகப்படுத்தும் விதத்தில், சென்னையை சேர்ந்த பிரபல் திரையரங்கம் சார்பில், விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய குப்பம் உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட பின் தான் முன்பதிவு துவங்கும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...