விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு எடுக்கப்பட்ட சில காட்சிகளின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் நிறையபேர் ஷேர் செய்தும் வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.
இதையடுத்து தயாரிப்பு தரப்பு, இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்கு பயன் இல்லாமல் போய்விட்டது. ஒரு தளத்தில் இருந்து வீடியோவை நீக்கினால், மற்றொரு தளத்தில் வீடியோ பகிரப்படுகிறது.
படத்தின் முக்கியமான காட்சிகள் இப்படி பரவி வருவதால், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன், ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், அன்பான ரசிகர்களே, தயவு செய்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ காட்சிகளை பகிர்ந்து பார்த்து ஊக்குவிக்காதீர்கள். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் மீதியுள்ளது. அது முடிந்ததும் டீசர், பாடல்கள் குறித்து ம்டுவி செய்துவிடலாம். என்று தெரிவித்துள்ளார்.
’நானும் ரவுடி தான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...