பிரபல கலை இயக்குநராக கடந்த 16 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பயணித்த ஆ.உமாஷங்கர், இயக்குநராகிறார்.
பல குறும்படங்களை இயக்கி பாராட்டு பெற்ற உமாஷங்கர் இயக்கத்தில், ஓம் ஸ்ரீ சாய் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘ஈஷா’ என்ற குறும்படம் டெல்லியில் நடைபெற்ற தாதா சாகிப் பால்கி 2017 விழாவில் சிறந்த படங்களுக்கான தனி தகுதி சான்றிதழ் பெற்றது.
உலகம் முழுவதும் இருந்து 1700 படங்களுக்கு மேற்பட்ட படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து இப்படம் தேர்வு செய்யப்பட்டு அவ்விழாவில் திரையிடப்பட்டது. மேலும், இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யாண், ஒளிப்பதிவாளர் கிரிஷோடபர் ஜோசப், எடிட்டர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனி தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இயக்குநர் உமாஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குருகல்யாண் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘குறள்-146’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட பணி பாடல் பதிவுடன் தொடங்குகிறது.
தனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதும் இயக்குநர் உமாஷங்கர் தற்போது ‘குறள்-16’ படத்திற்கான பணியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’...
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...