Latest News :

பா.ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறிய பெண்! - ஆபாசமாக பேசும் ரசிகர்கள்
Saturday January-05 2019

’அட்ட கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், தற்போது முன்னணி இயக்குநராக உருவெடுத்திருப்பதோடு, தலீத் சிந்தனையாளராகவும், தலீத் சமூகத்தின் முக்கிய வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறார். சினிமாவை தாண்டி வேறு சில விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் பா.ரஞ்சித்துக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

 

இந்த நிலையில், பெண் ஒருவர் இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூற, அந்த பெண்ணுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பா.ரஞ்சித்தின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், அப்பெண்ணை அசிங்கமாக பேசி அவமானப்படுத்தும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அறிமுக இயக்குநர் அகரம் கமுரா என்பவர் இயக்கத்தில் புதுமுகம் வர்மன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பிரான்மலை’. ஆணவக்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களும், பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும் பாடல்கள், இசை, திரைக்கதை, வர்மனின் நடிப்பு மற்றும் படத்தில் சொல்லப்பட்ட விஷயம் என்று அனைத்தும் பாராட்டும் விதமாகவே இருந்தது. இருப்பினும், படத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்காததால் படம் குறித்து அவ்வளவாக வெளியே தெரியவில்லை. ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் தவிக்கும் படக்குழு, எப்படியாவது இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வர, அதில் ஒன்றாக, இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து படம் குறித்து கூறியுள்ளனர். ஆனால், ரஞ்சித்தோ என்னால் என்ன செய்ய முடியும், நான் செய்ய வேண்டும், என்று கூறியதோடு, இந்த படம் குறித்து எங்கேயும் பேசவில்லை. இதனால் படக்குழு ரொம்பவே அப்செட்டாகியுள்ளனர்.

 

இதை தொடர்ந்து, சமீபத்தில் பத்திரிகையாளர்களை பிரான்மலை படக்குழு சந்தித்தது. அப்போது, படத்தின் இணைத் தயாரிப்பாளரான சுஜாதா, நல்ல படத்தை எத்தாலும், அதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது குறித்து தனது வேதனையை தெரிவித்ததோடு, ரஞ்சித்தை சந்தித்தது, அவரிடம் கிடைத்த ரெஸ்பான்ஸ் போன்றவற்றையும் கூறி தனது கவலையை தெரிவித்தார்.

 

வரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அந்த வீடியோவை பார்த்த பா.ரஞ்சித்தின் ஆதரவாளர்கள், இணை தயாரிப்பாளர் சுஜாதாவை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வீடியோவில் கமெண்ட் போட்டுள்ளனர். இதை பார்த்த சுஜாதா மற்றும் பிரான்மலை படக்குழு மேலும் வேதனை அடைந்துள்ளனர்.

 

பா.ரஞ்சித்தின் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அவரது ரசிகர்களோ அல்லது அவரது ஆதரவாளர்களோ, நீங்கள் ரஞ்சித்துக்காக ஆதரவாக பேசுவது தவறில்லை, ஏன், அவரை விமர்சித்த சுஜாதாவை விமர்சிப்பதும் தவறில்லை. ஆனால், அதை நாகரீகமான முறையில் செய்வதே சரி. அப்படி இல்லாமல் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை.

Related News

4015

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery