தென்னிந்திய திரைபப்ட சினி & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் யூனியனுக்கு சுப்ரீம் சுந்தர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் கடந்த 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம், 50 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கடந்த முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜி.சோமசுந்தரம் என்கிற எஸ்.டி.சுப்ரீம் சுந்தரே, இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிற பதவிக்கு தேர்வானவர்களின் பட்டியல்:
தவசிராஜ். S.D - உபதலைவர்
K.ராஜசேகர். S.D - துணைத்தலைவர்
G.பொன்னுசாமி S.A - செயலாளர்
V.மணிகண்டன் S.A - துணைச்செயலாளர்
S.S.M.சுரேஷ் S.A - இணைச்செயலாளர்
C.P.ஜான் S.A - பொருளாளர்
செயற்குழு உறுபினர்கள்
S.M.ராஜ் S.A
P.ரவிக்குமார் S.A
R.நாராயணன் S.A
R.பாபு S.A
A.வெங்கடேஷன் S.A
U.ஆனந்தகுமார் S.A
V.காசி S.A
M.வெற்றிவேல் S.D
M.சுகுமார் S.A
B.K.பிரபு S.D
E.பரமசிவம் S.A
K.சதாசிவம் S.A
மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...