தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும், நடிக்க தெரிந்த நடிகைகளில் முக்கியமானவராக உருவெடுத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு தேவை என்றால் பாட்டி வேடமாக இருந்தாலும் நடித்து விடுவார். அப்படி அவர் சிறு வேடத்தில் நடித்தாலும், அப்படங்கள் வெற்றிப் படமாக அமைவது தான் அவரது ஸ்பெஷல்.
இப்படி ஒரு ஸ்பெஷல் தன்மையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கனா’. சினிமாவில் சொல்லக்கூடிய ஏ,பி,சி என்று அனைத்து செண்டர் மக்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படக்குழு நேற்று சென்னையில் விழா ஒன்றை நடத்தியது.
இதில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞரக்ள் என அனைவருக்கும் வெற்றி கேடயம் வழங்கி கெளரவித்தது. இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தோடு கலந்துக்கொண்டார். மற்றும் சத்யராஜ், இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக்கொண்டார்கள்.
ஜாலியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சும் சற்று ஜாலியாக இருந்த நிலையில், அவர் கடைசியாக பேசியது மட்டும் கோடம்பாக்க ஹீரோக்களை வம்பிழப்பது போல அமைந்துவிட்டது. இதனால் அரங்கமே சற்று அதிர்ந்துபோன நிலையில், சிவகார்த்திகேயன் எழுந்த, அவரை “பேசுனது போதும்...வந்துடுமா...” என்று சொல்வது போல அழைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், படம் குறித்து அனைவரிடம் பாராட்டியதை பகிர்ந்துக்கொண்டதோடு, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார். இறுதியாக, “இது தான் உண்மையான வெற்றி விழா, நிறைய பேர் ஓடாத படங்களுக்கு எல்லாம், வெற்றி விழா கொண்டாடுறாங்க, ஆனா நாங்க அப்படியல்ல” என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்களும் தங்களது படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடி வரும் நிலையில், ஐஸ்வரயா ராஜேஷின் இத்தகைய பேச்சு கோலிவுட்டில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் தான் ஜெயம் ரவி தனது ‘அடங்க மறு’ படத்திற்கு வெற்றி விழா கொண்டாடினார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...