அஜித்தின் ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருப்பவர் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘அசல்’ படத்தோடு சிறு இடைவெளி விட்டவர், பிறகு 2017 ஆம் ஆண்டு தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில், மீண்டும் படம் இயக்கும் சரண், தனது புதிய படத்திற்கு ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். கமல்ஹாசனை வைத்து ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் எடுத்த சரண், அப்படத்திற்கு முதல் முறையாக ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தான் தலைப்பு வைத்தாராம். பிறகு அதை மாற்றிவிடவே, அந்த தலைப்பை தற்போது பயன்படுத்துகிறார்.
உதில் பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் அறிமுகமாகிறார். இவர்களுடன் நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
பல ஹீரோயின்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இயக்குநர் சரண், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் காவ்யா தப்பார் 18 வது ஹீரோயினாம். அதுமட்டும் இன்றில், ஆக்ஷன், காதல், காமெடி என்ற ஜானரில் படம் இயக்கி வந்த சரண், முதல் முறையாக பேண்டஸி பார்முலாவை இப்படத்தின் மூலம் தொட்டிருக்கிறாராம்.
சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு சரணின் இளைய சகோதரரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் தனது அண்ணன் சரணுடன் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...