அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ என இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகை குறி வைத்து ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகின்றது. இந்த இரு படங்களுக்காகவும், திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக தினமும் ஐந்து காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், ரசிகர்களுக்காக சில திரையரங்கங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதோடு, ஒரு டிக்கெட்டை ரூ.1000 க்கும் விற்பனை செய்துள்ளது.
இதில், விஸ்வாசம் படம் சென்னையின் சில திரையரங்குகளில் நள்ளிரவு 1.30 மணி காட்சிகள் போடப்பட்டு, அதற்கான டிக்கெட்டை ரூ.1000 விற்பனை செய்தும் முடித்துவிட்டது.
ஆனால், ரஜினியின் பேட்ட படத்திற்கு இதுபோன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 8 மணிக்கு மேல் தான் பேட்ட படத்தின் முதல் காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அஜித் படத்திற்கு ஓகே சொல்லியிருக்கும், தமிழக அரசு ரஜினி படத்திற்கு நோ சொல்லியிருப்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...