ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ இரண்டு படங்களும் இன்று வெளியாகி தற்போது சிறப்பு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களுடன் பல பிரபலங்களும் படம் பார்த்து வருகிறார்கள்.
இன்னும் சில மணி நேரங்களில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆகும், எந்த படம் சுமாராக இருக்கும், என்பது தெரிய வந்துவிடும் என்றாலும், சில பிரபலங்கள் முதல் பாகத்தை பார்த்துவிட்டு தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது சர்ச்சைகளை எழுப்பி வரும் நடிகை கஸ்தூரி, ‘பேட்ட’ படத்தின் முதல் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில், விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ”படம் மாஸ் மரணம். தலைவர் ரஜினிகாந்த் சூப்பர் ஹாட், சூப்பர் யங், சூப்பர் ஸ்டைலிஷ். ஒவ்வோரு காட்சியும் அமேசிங். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...