கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா ஆகியோர் நடிக்க, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் வில்லனாக நடித்திருக்கிறார்கள். சசிகுமார் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இன்று படத்தின் சிறப்பு காட்சியாக அதிகாலையிலேயே பல திரையரங்குகளில் படம் போடப்பட்டது. பெரும் கொண்டாட்டத்தோடு படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது முழு திருப்தி அடைந்து பேட்ட படத்தையும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
“இது தான் தலைவர் படம், 10 ஆண்டுகளில் வெளியான ரஜினி படங்களில் இது தான் பெஸ்ட்” என்று சிலர் கூறியுள்ளார்கள்.
”பிரேமுக்கு பிரேம் ரஜினி அசத்துகிறார். படம் முழுமையாக மாஸாக இருக்கிறது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி” என்று பலர் கூறியுள்ளார்கள்.
மொத்தட்தில், ‘பேட்ட’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருப்பது ரசிகர்களின் வார்த்தையிலேயே தெரிகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...