ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ என இரண்டு பெரிய படங்கள் நேற்று வெளியாகி அவர் அவர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும், விமர்சன ரீதியாக விஸ்வாசத்தை காட்டிலும் பேட்டைக்கு தான் அதிக மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது. அஜித்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும், மவுத் டாக் பப்ளிசிட்டியில் பேட்ட தான் முதல் இடத்தை பிடித்திருப்பதால், இனி வசூலிலும் பேட்ட தான் சாதனை படைக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, விஸ்வாசம் ரிலிஸின் போது அஜித் ரசிகர்கள் காட்டிய காட்டுமிராண்டித்தனங்களால் ஒட்டு மொத்த தமிழகமே சற்று கதிகலங்கி இருக்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் விஸ்வாசம் படத்தின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் அப்படியே சில கொலைகளையும் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
ரசிகர்களே வேண்டாம், என்று அஜித் பகிரங்கமாக அறிவித்த பிறகும், அவருக்காக இப்படி வெறிப்பிடித்து இருக்கிறார்களே! என்று பலருக்கு அவர்களது செயல் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், அஜித் ரசிகர்களை அஜித் தரப்பின் முக்கிய நபர் ஒருவர் மறைமுகமாக இயக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் வேண்டாம், என்று அஜித் சொன்னாலும் அவருக்கு நெருக்கமான நபர் ஒருவர், தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் அஜித் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி வருவதோடு, அவ்வபோது அவர்களுக்கு உத்தரவும் பிறப்பித்து வருகிறாராம். அஜித்தின் மீது இருக்கும் அன்பினால், அந்த நபர் சொல்வதை ஏதோ அஜித் சொல்வது போலவே எண்ணி, ரசிகர்களும் செய்து வருகிறார்களாம்.
விஸ்வாசம் ரிலீஸுக்கு முன்பு ரஜினிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் சினம் கொண்டு சீரியதற்கும் இந்த அஜித்தின் நெருக்கமான நபரின் தூண்டுதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் விஸ்வாசத்தின் பிரம்மாண்ட போஸ்டர்களும், பேனர்களும், அந்த நபரின் உத்தரவின் பேரில் தான் ஒட்டப்பட்டதாம்.
அஜித்க்கு நெருக்கமான அந்த நபர், இப்படிப்பட்ட பேனர்களை அச்சடிக்க வேண்டும், என்ற உத்தரவோடு அதை ரஜினி வீட்டு அருகேயும் ஒட்ட சொன்னாராம், அவரது கட்டளையை ஏற்று தான், அஜித் ரசிகர்கள் ரஜினியை வசைப்பாடியதோடு, அவரை வம்புக்கும் இழுத்ததாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், அஜித் வேண்டாம் என்று சொல்வது போல சொன்னாலும், ரசிகர்களை வைத்து அஜித் தரப்பு பல காரியங்களை மறைமுகமாக செய்து வருவதாக, ரசிகர்கள் ஏரியாவில் பேசப்பட்டு வருகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...