‘களவாணி’ படத்தின் மூலம் விமலை ஹீரோவாக்கியதோடு இயக்குநர் சற்குணம், ‘களவாணி-2’ படத்திற்காக மீண்டும் விமலை இயக்குகிறார்.
2009-ல் ‘களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியான விமல், நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு இரணடு முதல் ஐந்து படங்கள் வரை வெளியாகி கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ‘அஞ்சல’ மற்றும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ படங்களுக்கு பிறகு விமலின் எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், “புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்” என்ற ரீதியில் தற்போதும் விமல் உற்சாகத்தோடு தான் இருக்கிறார்.
இதே உற்சாகத்தோடு நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய விமல், தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் மேலும் உற்சாகமடைந்துள்ளாராம். விமல் சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை தயாரித்து நடிக்க உள்ளார்.
அதில் ஒன்று, ‘வெற்றிவேல்’ படத்தை இயக்கிய வசந்தமணி இயக்க, மற்றொரு படத்தை சற்குணம் இயக்குகிறார். அப்படம் தான் ‘களவாணி-2’. இதில் கஞ்சா கருப்பு மற்றும் சூரி கூட்டணியும் தொடர்கிறது.
தற்போது மாதவனை இயக்க உள்ள சற்குணம் அப்படம் முடிந்ததும், ‘களவாணி-2’ படத்தை தொடங்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...