நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்ற பெண்ணை அவருக்கு பேசி முடித்திருப்பதாகவும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி சமீபத்தில் கூறியிருந்தார்.
நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த கல்யாண செய்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த நிலையில், வரலட்சுமியும் விஷால் திருமணம் பற்றியும், அவர் யாரை திருமணம் செய்ய இருக்கிறார் என்பதும் எனக்கு ஏற்கனவே தெரியும், என்று கூறி மேலும் அதிர்ச்சியளித்தார். இருப்பினும் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் புகைப்படம் மட்டும் வெளியாகமல் இருந்தது.
இதற்கிடையே, தன் திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தானே விரைவில் அறிவிப்பேன் என்றும் விஷால் நேற்று கூறினார்.
இந்நிலையில் விஷால் காதலிக்கும் ஆந்திர பெண் இவர்தான் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படம் வழக்கம் போல வெறும் வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
எது உண்மை என்று விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...