Latest News :

முரட்டு குத்து நடிகையின் குத்தாட்டம்! - ’கழுகு 2’ வின் ஹைலைட்டானது
Saturday January-12 2019

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார். 

 

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.  

 

இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு  அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா.

 

'சகலகலா வள்ளி'  எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு  நடனம் அமைத்துள்ளார். கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது. 

 

'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.

Related News

4059

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery