சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, இதுவரை சிவா - அஜித் கூட்டணி படங்களைக் காட்டிலும் இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே, விஸ்வாசம் ரிலிஸ் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் அஜித் ரசிகர்கள் மீது கெட்டப் பெயர் ஏற்பட்டிருந்தாலும், பல ரசிகள் நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும், தன் மீது வைத்திருக்கும் அன்பையும் அறிந்த அஜித், ரசிகர்கள் பற்றி பெருமையாக பேசியதோடு, தான் இப்படி நடிப்பதற்கு ரசிகர்களின் ஆசிர்வாதம் தான் காரணம் என்று நடிகர் ரோபோ சங்கரிடம் கூறினாராம். மேலும், தன் மீது இப்படி பாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை, என்று கூறினாராம்.
அதற்கு ரோபோ சங்கர் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுங்கள், ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள், என்று கூற, அதற்கு அஜித், ஆம் நிச்சயமாக ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிக்கப் போகிறேன், என்று கூறியிருக்கிறார்.
இதுபோதது என்று, ரசிகர் மன்றம் வேண்டாம் என்று கூறியதை நினைவு கூரிந்த அஜித், மீண்டும் தனது ரசிகர்களையும், மன்றங்களையும் ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்தின் இந்த புது முடிவு குறித்து அவரது ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...